தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி நட்பு காதலாக மாறியது.கல்யாணத்தில் முடிந்த அவர்களது வாழக்கையில் தற்போது விதி விளையாடிவிட்டது